Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வார விடுமுறைக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கம்

வார விடுமுறைக்கு சிறப்பு  அரசு பேருந்துகள் இயக்கம்

இந்த விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பயணத்தை உறுதிப்படுத்தவும் பயணிகள் www.tnstc.in இணையதளம், TNSTC Mobile App-ல் முன்பதிவு செய்யுமாறு போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது

பகிரவும் WhatsApp Facebook

வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாளை முதல் 3 நாளுக்கு சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கும், மாட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கும் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.

தொடர்ந்து 2வது வாரமாக ‘வார விடுமுறை’ சிறப்பு பேருந்துகளை, போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. இதையடுத்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்கு அக்.30-ம் தேதி 690, 31-ம் தேதி 505 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு அக். 30-ம் தேதி 55, 31-ம் தேதி 40 பேருந்துகள் இயக்கப்படும்.
மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு அக்.30,31 தேதிகளில் தலா 65 சிறப்புப் பேருந்துகள் இயங்கும்.

பெங்களூரு, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மீண்டும் நவ.1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு பயணிப்பவர்களுக்காக 690 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இன்று அறிவித்தது. இந்த விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பயணத்தை உறுதிப்படுத்தவும் பயணிகள் www.tnstc.in இணையதளம், TNSTC Mobile App-ல் முன்பதிவு செய்யுமாறு போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

முந்தைய செய்தி
Onion prices surge at weekly market
அடுத்த செய்தி
GDP வளர்ச்சி 7.35 % -ஆக உயரும்

தொடர்புடைய செய்திகள்