Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தூத்துக்குடியில் ரூ.38 ஆயிரம் கோடியில் கப்பல் கட்டும் தளம்

தூத்துக்குடியில் ரூ.38 ஆயிரம் கோடியில் கப்பல் கட்டும் தளம்

கப்பல் கட்டும் தளத்தின் பணிகளை ஒருங்கிணைத்து, விரைவுபடுத்துவதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், சியோலில் நேற்று (அக்.28) ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத் தலைவர் சுங் சி சன்னைச் சந்தித்து, தூத்துக்குடியில் அமைக்கப்பட உள்ள புதிய பசுமைக் கப்பல் கட்டும் தளத்துக்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

இந்தியா - தென்கொரியா இடையே கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் தொழில் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சர்பானந்த சோனோவால் தென்கொரியாவில் 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இச்சந்திப்பு நடைபெற்றது. ஹெச்டி ஹூண்டாயின் கப்பல் கட்டும் பிரிவான ஹெச்டி கொரியா கப்பல் கட்டுமானம் மற்றும் கடல் பொறியியல் நிறுவனம் இத்திட்டத்தில் முதன்மை முதலீட்டாளராகப் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.

தேசிய கப்பல் கட்டுமானம் மற்றும் கனரக தொழில்துறைப் பூங்கா நிறுவனமும், ஹெச்டி கொரியா கப்பல் கட்டுமானம் மற்றும் கடல் பொறியியல் நிறுவனமும் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து சர்பானந்த சோனோவால் கூறியதாவது: கப்பல் கட்டும் தளத்தின் பணிகளை ஒருங்கிணைத்து, விரைவுபடுத்துவதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. 

நடப்பாண்டு ஏப்ரல் 20-ம் தேதி கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்த திட்டத்தை இணைந்து உருவாக்குவதற்கான அடித்தளமாக அமைந்துள்ளது. சுமார் ரூ.38 ஆயிரம் கோடி முதலீட்டில் (4 பில்லியன் அமெரிக்க டாலர்) அமையவுள்ள இக்கப்பல் கட்டும் தளம், கப்பல் கட்டுமானத் துறையில் பெரிய மைல்கல்லாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
AI-க்கான தேவை தொடர்ந்து அதிகரிப்பு
அடுத்த செய்தி
இரு மடங்குக்கும் மேல் அதிகரித்தது வேதாந்தா நிகர லாபம்

தொடர்புடைய செய்திகள்