Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

துவங்கப்படாத திருச்சி-திருப்பதி ரயில் சேவை - பயணிகள் அதிருப்தி

துவங்கப்படாத திருச்சி-திருப்பதி ரயில் சேவை - பயணிகள் அதிருப்தி

திருச்சி-திருப்பதி நேரடி ரயில் சேவையைத் தாமதமின்றித் தொடங்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

திருச்சி மற்றும் மத்திய மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான திருச்சி-திருப்பதி நேரடி பகல்நேர ரயில் சேவைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து 5 மாதங்களாகியும், இதுவரை ரயில் சேவை தொடங்கப்படாததால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.



குண்டூர்-திருப்பதி விரைவு ரயிலை (17261/17262), திருச்சி வரை நீட்டித்து இயக்க கடந்த மே 8-ல் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இருப்பினும், ரயில் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால், திருச்சியிலிருந்து திருப்பதிக்கு நேரடியாகச் செல்லும் வாய்ப்பு கிடைப்பதுடன், வழித்தடத்தில் உள்ள பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த ரயில் நீட்டிப்புக்கான திட்டத்தில் ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி ரோடு, வேலூர் கண்டோன்மென்ட், காட்பாடி, சித்தூர், பக்காலா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தங்கள் இடம்பெற்றுள்ளது.

திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், குடும்பத்துடன் பயணம் செய்வோர், வணிகர்கள், பொதுமக்களுக்கு இந்த நேரடி ரயில் சேவை மிகவும் உதவியாக இருக்கும். திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்கும் பயண வசதி மேம்படும். ரயில்வே நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து, திருச்சி-திருப்பதி நேரடி ரயில் சேவையைத் தாமதமின்றித் தொடங்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
முந்தைய செய்தி
கனடாவிலேயே நீடிக்க முடிவெடுத்த ஆல்பர்ட்டா!
அடுத்த செய்தி
உழவர் சந்தைகளில் ரூ.1.77 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

தொடர்புடைய செய்திகள்