Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காலாண்டு விடுமுறை ஓவர்! - நாளை பள்ளிக்கு போக தயாராகுங்க!

காலாண்டு விடுமுறை ஓவர்! - நாளை பள்ளிக்கு போக தயாராகுங்க!
பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து நாளை (அக். 5) மீண்டும் திறக்கப்பட உள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து நாளை (அக். 5) மீண்டும் திறக்கப்பட உள்ளன.

பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே 1 முதல் 7-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை உரிய பதிவேடுகள் மற்றும் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, விஜயதசமி நாளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு சேர்க்கையை மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சேர்க்கை விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மழைக்காலத்தில் பள்ளி வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் வளாகங்களைத் தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


முந்தைய செய்தி
மாயமான விமானம் - 6 பேரை தேடும் பணி தீவிரம்!
அடுத்த செய்தி
பங்குச் சந்தையும், புதிய வெளியீடுகளும் - ஓர் அலசல்!

தொடர்புடைய செய்திகள்