Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சத்துமாவு முறைகேடு: அங்கன்வாடி ஊழியர் 5 பேர் சஸ்பெண்ட்

சத்துமாவு முறைகேடு: அங்கன்வாடி ஊழியர் 5 பேர் சஸ்பெண்ட்

2023-ல் அங்கன்வாடி மையங்களில் 43,604 குழந்தைகள் பதிவு செய்திருந்த நிலையில், 2025-ல் இந்த எண்ணிக்கை 44,797-ஆக அதிகரித்துள்ளது. 2026-27-ம் கல்வியாண்டில் 46,000 மேற்பட்ட குழந்தைகளைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

திருச்சி மாவட்டத்தில் சத்துமாவு முறைகேடு செய்ததாக அங்கன்வாடி மையப் பணியாளர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1,850 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு, முன்பருவக் கல்வி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உதவிகள் வழங்கப்படுகின்றன.

2023-ல் அங்கன்வாடி மையங்களில் 43,604 குழந்தைகள் பதிவு செய்திருந்த நிலையில், 2025-ல் இந்த எண்ணிக்கை 44,797-ஆக அதிகரித்துள்ளது. 2026-27-ம் கல்வியாண்டில் 46,000 மேற்பட்ட குழந்தைகளைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குண்டூர் அயன்புத்தூரில் உள்ள பிரபல பிரியாணிக் கடையின் ஆடு வளர்ப்புப் பண்ணையில் மூட்டை மூட்டையாக சத்துமாவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட அங்கன்வாடி மையப் பணியாளர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, மாவட்டம் முழுவதும் முறைகேடு நடந்திருக்கலாம் என்பதால், விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
குழந்தைகள் தினத்தை கொண்டாட அரசு திட்டம்: 61 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ’கேக்’
அடுத்த செய்தி
சைலண்ட் மோடில் பாமக; புதிய வியூகத்தில் தவெக - அதிர்ச்சியில் விசிக

தொடர்புடைய செய்திகள்