Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

முதல் முறையாக இண்டியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட தவெக - தலைமை தேர்தல் ஆணையருக்கு செக்

முதல் முறையாக இண்டியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட தவெக - தலைமை தேர்தல் ஆணையருக்கு செக்
இந்தியா கூட்டணி

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 13, 14-ம் தேதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் மாவட்ட வாரியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 13, 14-ம் தேதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் மாவட்ட வாரியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

சென்னை காங்கிரஸ் தலைமையகம் சத்தியமூர்த்தி பவனில், இண்டி கூட்டணி சார்பில் ஆலோசனை நடந்தது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், விசிக தொல். திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், சிபிஐ சார்பில் ரவீந்திரநாத், ஐயுஎம்எல் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ’சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தகுதியான 13 கோடி வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கின்ற வகையிலும் செயல்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 13, 14-ம் தேதிகளில் மாவட்ட தலைநகரங்களிலும், 15-ம் தேதி சென்னையிலும் இண்டியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியில் இருந்து திமுக விலகிய நிலையில், நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
முந்தைய செய்தி
Wild elephant strays into village
அடுத்த செய்தி
Mahindra, Embraer identify Nagpur for C-390 assembly facility

தொடர்புடைய செய்திகள்