Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தவெக–காங்கிரஸ் கூட்டணி நீண்ட காலம் நீடிக்கும் - மாணிக்கம் தாகூர் நம்பிக்கை

தவெக–காங்கிரஸ் கூட்டணி நீண்ட காலம் நீடிக்கும் - மாணிக்கம் தாகூர் நம்பிக்கை

தவெக – காங்கிரஸ் கூட்டணி நீண்ட காலம் நீடிக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார்.

பகிரவும் WhatsApp Facebook

மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக உடன் காங்கிரஸ் வைத்துள்ள கூட்டணி ஒரு உள்ளார்ந்த, மதிப்புமிக்க, சகோதரத்துவ, கொள்கைக் கூட்டணியாகும். காமராஜர் ஆட்சியே எங்களது கட்சியின் கனவு. அமைச்சர் பதவி எங்களது கனவு அல்ல என்று அமைச்சர் ராஜேஷ் கூறியதை சிலர் திரித்து கூறுகின்றனர்.

திருமாவளவனை முதல்வராக்க முயற்சி நடந்ததாக டிடிவி தினகரன் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, `திருமாவளவன் பாஜக, ஆர்எஸ்எஸ், பாமகவுக்கு எதிரான நிலையில் உள்ளார். இந்த கட்சிகளை எல்லாம் சேர்த்துதான் விசிகவுடன் கூட்டணி என்று டிடிவி தினகரன் கூறுகிறார். அவரது கட்சி எம்எல்ஏவையே அவரால் காப்பாற்ற முடியவில்லை. தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்த பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது.

 
முதலில் எடப்பாடி பழனிசாமி மூலம் அதிமுகவை தனது கையில் வைத்துக்கொள்ள நினைத்தது. தற்போது டிடிவி தினகரனை கையில் வைத்துள்ளது. தற்போது, அடுத்த திட்டத்தை செயல்படுத்த பாஜக முயல்கிறது.


அண்ணாமலைக்கு புதிய முகம் கொடுத்து, அவர் பாஜகவை விட்டு வெளியேறி தனியாக இயக்கம் நடத்தி வருகிறார். தற்போது மற்றொரு திட்டமாக நடிகர் ஒருவரை கட்சியில் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். டெல்லியில் இருந்து அமித்ஷா உத்தரவில் இத்திட்டங்கள் எல்லாம் நடக்கிறது.

அதிமுகவின் டிஎன்ஏ திரைத்துறையுடன் கலந்தது. அக்கட்சியின் வாக்குகளை கவர பாஜக தொடர்ந்து முயற்சிக்கிறது. பாஜகவும், ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதிமுகவின் இடத்தை பிடிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்கின்றன. இவ்வாறு கூறினார்.

முந்தைய செய்தி
Rice companies eye UK, European markets
அடுத்த செய்தி
தீபாவளி ஷாப்பிங் - ஜவுளி விலை 5–10% உயர்வு

தொடர்புடைய செய்திகள்