Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளி ஷாப்பிங் - ஜவுளி விலை 5–10% உயர்வு

தீபாவளி ஷாப்பிங் - ஜவுளி விலை 5–10% உயர்வு

நூற்பாலைகள் ஒவ்வொரு மாதமும் நூல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

 பருத்தி மற்றும் பாலியஸ்டர் கலப்பு நூல்களின் விலை உயர்வால் துணிகள் மற்றும் பாலியஸ்டர் கலப்புத் துணிகளின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் மற்றும் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சியால் பருத்தி உற்பத்தி குறைந்துள்ள நிலையில், நூற்பாலைகள் ஒவ்வொரு மாதமும் நூல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. 


இதனால், பருத்தி நூலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேற்காசிய போரால் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால், பாலியஸ்டர் நூலின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு ஜவுளி உற்பத்தியை பாதித்துள்ளதோடு, தீபாவளிக்காக தயாராகும் ஆடைகளின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் .


நாமக்கல்லில் இரண்டு விசைத்தறிப் பூங்காக்கள் செயல்பட்டு வரும் நிலையில், ஈரோட்டிலும் அதுபோன்ற பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஜவுளிப் பதப்படுத்தும் ஆலைகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தொழிலைத் தொடர்ந்து நடத்தவும் பொதுகழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
தவெக–காங்கிரஸ் கூட்டணி நீண்ட காலம் நீடிக்கும் - மாணிக்கம் தாகூர் நம்பிக்கை
அடுத்த செய்தி
Two killed in road accident

தொடர்புடைய செய்திகள்