Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வெங்காயம் ரூ.110-ஆக அதிகரிப்பு - மக்கள் கண்ணீர்!

வெங்காயம் ரூ.110-ஆக அதிகரிப்பு - மக்கள் கண்ணீர்!

சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.110-ஐ எட்டியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

திண்டுக்கல் மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.110-ஐ எட்டியுள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பழனி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, குஜிலியம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நாட்டு வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுறது. ஆனால், போதிய மழை இல்லாத காரணத்தினால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் வெங்காயத்தின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.

வெங்காய மார்க்கெட்டுக்கு திருப்பூர், கோவை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்கு வருகிறது. வழக்கமாகச் சந்தை நாட்களில் 50 கிலோ எடையுள்ள மூட்டைகள் 3,500 முதல் 4,000 வரை சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும். ஆனால், தற்போது வரத்து குறைந்து வெறும் 1,500 மூடைகள் வந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற இடங்களில் மழை பொய்த்தது ஒருபுறம் இருக்க, தேனி மாவட்டத்தில் பெய்த அதிக மழையினாலும் வெங்காய பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் தரம் மற்றும் வகையைப் பொறுத்து சின்ன வெங்காயம் கிலோ ரூ.55 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் நாட்டுக்காய் வகை வெங்காயம் 90 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுவதால், அதன் விலை கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயத்தின் விலையைப் பொறுத்தவரை, தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனையாகிறது.

வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சில்லறை வியாபாரிகளின் வாங்கும் திறன் பாதியாகக் குறைந்துள்ளது. வழக்கமாக 30 மூடைகள் வாங்கும் வியாபாரிகள் தற்போது 10 முதல் 15 மூடைகள் மட்டுமே வாங்கிச் செல்வதால் வியாபாரம் மந்தமாகியுள்ளது.

மேலும், போக்குவரத்துச் செலவு மற்றும் கூலி போக சில்லறை விற்பனையில் வெங்காயம் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் வாங்குவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டுள்ளனர். வரவிருக்கும் தீபாவளி பண்டிகை காலத்தில் வெங்காயத்தின் வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளதால், விலை கிலோ ரூ.150-ஐ தாண்டக்கூடும் என்று வியாபாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
முந்தைய செய்தி
டி-மார்ட் லாபம் ரூ.743 கோடியாக உயர்வு
அடுத்த செய்தி
அக். 27 முதல் மீண்டும் நேரடி விமானச் சேவை

தொடர்புடைய செய்திகள்