Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நெருங்கும் பண்டிகை - ஜவுளி வியாபாரம் மும்முரம்

நெருங்கும் பண்டிகை - ஜவுளி வியாபாரம் மும்முரம்
ஈரோட்டில் நடைபெற்ற வாராந்திர சந்தையில் ஜவுளி வாங்கிய வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்.

வியாபாரிகளின் கொள்முதல் அதிகரித்ததால் வியாபாரம் வேகம் பெற்றது.

பகிரவும் WhatsApp Facebook

நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளையொட்டி, ஈரோடு வாராந்திர ஜவுளி சந்தையில் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளின் கொள்முதல் அதிகரித்ததால் வியாபாரம் வேகம் பெற்றது. திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும் இரவு நேர சந்தையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வியாபாரிகளின் வருகை கூடியது.


காந்திஜி ரோடு, ஸ்டேட் பேங்க் ரோடு மற்றும் சென்ட்ரல் தியேட்டர் பகுதிகளை சுற்றியே இந்த வாரம் ஜவுளி சந்தை நடைபெற்றது. ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர். சாலையோரங்களிலும் ஏராளமானோர் தற்காலிகக் கடைகள் அமைத்தனர்.
சட்டை, டீ-ஷர்ட், பேண்ட், ஜீன்ஸ், சுடிதார் உள்ளிட்ட ஆடைகள் என அனைத்து வகை ஜவுளிப் பொருட்களும் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன. தீபாவளி நெருங்கியதையடுத்து, புதிய வடிவமைப்பிலான ஆடைகள் மற்றும் பண்டிகை சிறப்பு தொகுப்புகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

கனி மார்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறுகையில், "சில்லறை விற்பனைக்கான ஜவுளி ரகங்களை வாங்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகளும் அதிக அளவில் மொத்தக் கொள்முதல் செய்ததால், மொத்த வியாபாரத் தேவை வலுப்பெற்றது. பண்டிகை காலம் காரணமாக சில்லறை வியாபாரமும் நல்ல வேகத்தில் நடைபெற்றது. கடந்த வாரத்தை விட மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் தலா 40 சதவீதம் அதிகமாக இருந்ததாக தெரிவித்தார்.



முந்தைய செய்தி
Man dies after snakebite
அடுத்த செய்தி
Thieves strike at temple

தொடர்புடைய செய்திகள்