Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வட்டி உயர்வு வீடு விற்பனையை பாதிக்குமா?

வட்டி உயர்வு வீடு விற்பனையை பாதிக்குமா?

ரியல் எஸ்டேட் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பாதையை கணிசமாக பாதிக்க வாய்ப்பில்லை

பகிரவும் WhatsApp Facebook

வீட்டுக் கடன்களுக்கான வட்டி உயர்வு, வீடுகள் விற்பனையையோ, வீடு வாங்குவோர் மனநிலையையோ பெரிய அளவில் பாதிக்காது என்று கிரெடாய் சென்னை அமைப்பின் தலைவர் மெஹூல் எச். தோஷி தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக வங்கிகள், வீடு, வாகனக் கடன்களுக்கு வட்டியை உயர்த்தி வருகின்றன.


கிரெடாய் சென்னை அமைப்பின் தலைவர் மெஹூல் எச். தோஷி கூறியதாவது: வட்டி உயர்வால் வீட்டுக்கடன் பெறுவதற்கான செலவு ஓரளவு அதிகரிக்கும் என்றாலும், அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும்.

தற்போதைய வட்டி உயர்வை அடிப்படையாகக் கொண்டால், 15 ஆண்டுகளுக்கான வீட்டுக்கடனில் ஒவ்வொரு ரூ.1 லட்சம் கடன் தொகைக்கும் இஎம்ஐ, சுமார் ரூ.14 மட்டுமே அதிகரிக்கும்.

 நாட்டின் குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தைக்கு அடிப்படையான தேவை தொடர்ந்து வலுவாக உள்ளது. மேலும், வீடு வாங்குவோர் தற்போது சொத்துகளை குறுகிய கால முதலீடாக மட்டுமின்றி, நீண்ட கால முதலீடாகவும் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

 இதன் காரணமாக, கடன் செலவில் ஏற்படும் சிறிய அளவிலான உயர்வு, வீடுகளுக்கான தேவை, விற்பனை வேகம் மற்றும் குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பாதையை கணிசமாக பாதிக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
மக்களே குடை ரெடியா..? கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த செய்தி
இளைஞர்கள் வேலை தருபவர்களாக மாற வேண்டும் - எல்.முருகன்

தொடர்புடைய செய்திகள்