Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விலை உயர்வால் ஹோட்டல்களில் தக்காளி சட்னி `கட்'

விலை உயர்வால் ஹோட்டல்களில் தக்காளி சட்னி `கட்'

தக்காளி விலை உயர்ந்ததால் ஹோட்டல்களில் தக்காளி சாதம், தக்காளி சட்னி போன்றவை மெனுவில் இடம்பெறவில்லை.

பகிரவும் WhatsApp Facebook

கரூர்:

தக்காளி விலை உயர்வின் காரணமாக, ஓட்டல் கடைகளில் தக்காளி சாதம், தக்காளி சட்னி போன்றவை மெனுவில் இடம் பெறவில்லை.


கரூர் மாவட்டத்தில் செயல்படும் உழவர் சந்தைகள் மற்றும் காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், அய்யலூர்உள்ளிட்ட பகுதியிலிருந்து நாள்தோறும் விற்பனைக்காக தக்காளி வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களில் தக்காளி கிலோ ரூ. 25 வரை அதிகரித்துவிட்டது. தக்காளி விலை உயர்ந்ததால் ஹோட்டல்களில் தக்காளி சாதம், தக்காளி சட்னி போன்றவை மெனுவில் இடம்பெறவில்லை. 

விலை அதிகரித்ததை தொடர்ந்து ஏற்கனவே எலுமிச்சை சாதம் தயார் செய்வதை நிறுத்தி இருந்தோம்.
இப்போது விலை கட்டுபடியாகாததால் தக்காளி சாதம் தயார் செய்வதையும் நிறுத்திவிட்டதாக உணவு விடுதி நடத்தும் சரவணன் என்பவர் தெரிவித்தார்.


கடந்த மாதம் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை இருந்த பெரிய ரக தக்காளி தற்போது ரூ.50 முதல் ரூ.55 வரை உயர்ந்துள்ளது. சிறிய தக்காளி ரூ.40 ல்இருந்து ரூ.45 ஆக உயர்ந்துள்ளது. தொடர் மழையால் தக்காளி செடிகளில் பூக்கள் உதிர்ந்து விளைச்சல் மற்றும் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய காரணங்கள்

* தொடர் மழையால் தக்காளி செடிகள் பாதிப்பு
* பூக்கள் உதிர்வதால் விளைச்சல் குறைவு.
* ஒட்டன்சத்திரம் அய்யலூர் சந்தைகளில் வரத்து குறைவு.

முந்தைய செய்தி
Dengue prevention measures launched in 1,534 Chennai Corporation schools
அடுத்த செய்தி
காதி கிராப்ட்டில் 30 சதவீதம் தள்ளுபடி - பாடி வாஷ் அறிமுகம்!

தொடர்புடைய செய்திகள்