Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஏஐ தொழில்நுட்பத்தில் ரூ.17 லட்சம் கோடி முதலீடு

ஏஐ தொழில்நுட்பத்தில் ரூ.17 லட்சம் கோடி முதலீடு

அபாயத்தை விளக்கிய ஜுக்கர்பெர்க்

பகிரவும் WhatsApp Facebook

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வெற்றி உறுதியாகாத நிலையிலும், அதன் மேம்பாடு மற்றும் கட்டமைப்புக்காக 200 பில்லியன் டாலர் வரை(சுமார் ரூ.17 லட்சம் கோடி) முதலீடு செய்ய மெட்டா தயாராக இருந்ததாக மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

‘செக்கி பைன்ட்’ பாட்காஸ்டில் பேசிய அவர், திட்டத்தின் வெற்றி குறித்து ஏஐ பிரிவுத் தலைவர் அலெக்சாண்டர் வாங்கிடம் கேள்வி எழுப்பியதாகக் கூறினார். திட்டம் தோல்வியடைந்தால் பெரும் நிதிப் பாதிப்பு ஏற்படும் என நிதித் தலைவர் சூசன் லி எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

 
ஓபன்ஏஐ, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிட மெட்டா முதலீட்டை அதிகரித்து வருகிறது. இதனிடையே, குறியீட்டு உருவாக்கம், நிதி, சட்டக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் புதிய ஏஐ மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முதலீடுகள் எவ்வளவு வருவாய் ஈட்டும் என்பது கேள்வியாக நீடிப்பதால், அவற்றின் பலன்களை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.

 
ஆராய்ச்சி மற்றும் கணினிக் கட்டமைப்புக்கான இந்தச் செலவுகள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு எந்த அளவுக்குப் பங்களிக்கும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனச் செய்தி தெரிவிக்கிறது.

முந்தைய செய்தி
Centre panel to review sugar prices, farmer dues
அடுத்த செய்தி
இரட்டை நிலைப்பாடு கூடாது: ஐ.நா.வுக்கு இந்தியா எச்சரிக்கை

தொடர்புடைய செய்திகள்