Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பல்லுயிர் பாதுகாப்பு இலக்குகளை அடைய 200 நாடுகள் உறுதி

பல்லுயிர் பாதுகாப்பு இலக்குகளை அடைய 200 நாடுகள் உறுதி

ஆர்மீனியாவின் தலைநகர் யெரெவானில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற இந்த மாநாட்டில், உலக நாடுகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

பகிரவும் WhatsApp Facebook

ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர் பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 200 நாடுகள் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு முக்கிய ஒப்பந்தங்களை எட்டியுள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் விவாதங்கள் நீடித்தன. இறுதியில் முக்கியத் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டபோது, பிரதிநிதிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

எனினும், சில சர்ச்சைக்குரிய விவகாரங்களில் கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவியதாலும், போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஆர்மீனியாவில் நடைபெற்ற COP17 மாநாடு, 2030-ம் ஆண்டுக்குள் இயற்கை வளங்களின் அழிவைத் தடுத்து, பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுப்பதற்கான உலகளாவிய உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.

ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட பல்லுயிர் பாதுகாப்பு இலக்குகளை அடைவதில் உலக நாடுகளின் முயற்சிகள் போதிய முன்னேற்றத்தை எட்டாத நிலையில், இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றது.

ஆர்மீனியாவின் தலைநகர் யெரெவானில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற இந்த மாநாட்டில், உலக நாடுகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், பல்லுயிர் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் இலக்குகளை அடையவும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

2030-ம் ஆண்டுக்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ள பல்லுயிர் பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கான உலக நாடுகளின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை ஏற்கெனவே எச்சரித்திருந்தது.

குறிப்பாக, பூமியின் நிலப்பரப்பு மற்றும் கடல் பகுதிகளில் 30 சதவீதத்தைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது, அந்நிய ஆக்கிரமிப்பு உயிரினங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது மற்றும் இயற்கை வளப் பாதுகாப்புக்கான நிதியை அதிகரிப்பது ஆகியவை முக்கிய இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நீண்ட விவாதங்களுக்குப் பிறகு இரண்டு முக்கிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, மாநாட்டின் முடிவுகள் குறித்து பிரான்ஸ் சுற்றுச்சூழல் மாற்றத்துறை அமைச்சர் மோனிக் பார்பூட் அதிருப்தி தெரிவித்தார்.

மாநாடு நிறைவடையும் நிலையில் பேசிய அவர், “இயற்கை உலகம் எதிர்கொண்டுள்ள கடுமையான நெருக்கடியின் அளவுக்கு ஏற்ப இந்த மாநாட்டின் முடிவுகள் அமையவில்லை” என்று விமர்சித்தார்.

முந்தைய செய்தி
ஆந்திராவை நோக்கி நகரும் ‘முரசு’ புயல்
அடுத்த செய்தி
மணிக்கு 790 கிலோ மீட்டர்- உலக சாதனை படைத்த ட்ரோன்

தொடர்புடைய செய்திகள்