Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பாதரசத்தில் இருந்து தங்கம் - அமெரிக்க நிறுவனம் முயற்சி!

பாதரசத்தில் இருந்து தங்கம் - அமெரிக்க நிறுவனம் முயற்சி!

இந்த முறையில், பாதரசத்தின் அணுக்கருவில் மாற்றத்தை ஏற்படுத்தி, அது தங்கமாக மாறும் வகையில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

பல நூற்றாண்டுகளாக அறிவியலாளர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் ஈர்த்து வந்த ஒரு கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதாக கூறி கவனம் பெற்றுள்ளது அமெரிக்காவின் மாரத்தான் ஃபியூஷன் (Marathon Fusion) நிறுவனம். பாதரசத்தைத் தங்கமாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கைல் ஷில்லர் தலைமையிலான குழு, அணுக்கரு இணைவு செயல்முறையில் உருவாகும் நியூட்ரான்களைப் பயன்படுத்தி பாதரசத்தை நிலையான தங்கமாக மாற்றியதாகக் கூறியுள்ளது. இதன்மூலம், 2025-ல் CERN ஆராய்ச்சி மையம் பதிவு செய்த அளவைவிட ( சுமார் 29 பிகோகிராம் தங்கம் ) 10 மடங்கு அதிக விகிதத்தில் தங்கத்தை உருவாக்கியுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முறையில், பாதரசத்தின் அணுக்கருவில் மாற்றத்தை ஏற்படுத்தி, அது தங்கமாக மாறும் வகையில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. வேதியியல் மாற்றங்களால் ஒரு தனிமத்தை மற்றொரு தனிமமாக மாற்ற முடியாது. ஆனால், அணுக்கருவில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் அது சாத்தியமாகும்.

இருப்பினும், இந்தக் கண்டுபிடிப்பு குறித்த முக்கிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. குறிப்பாக, எவ்வளவு தங்கம் தயாரிக்கப்பட்டது என்பதையும், இந்தச் சோதனை முடிவுகளை உறுதிப்படுத்தும் சுயாதீன ஆய்வுத் தகவல்களையும் நிறுவனம் வெளியிடவில்லை. மேலும், இந்தத் தொழில்நுட்பத்தை வணிக ரீதியில் பயன்படுத்த முடியுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. தங்கத்தை உற்பத்தி செய்வதற்கான செலவு, கதிரியக்கப் பொருட்களைக் கையாளுதல் உள்ளிட்ட சவால்களும் உள்ளன.

எனவே, பாதரசத்தைத் தங்கமாக மாற்றுவது அறிவியல் ரீதியில் சாத்தியமானதாக இருந்தாலும், இந்த முறையில் அதிக அளவில் தங்கத்தை உற்பத்தி செய்வது பொருளாதார ரீதியில் சாத்தியமா என்பது உறுதியாகவில்லை.

முந்தைய செய்தி
RBI தரவு மையத்தை திறைந்து வைத்த பிரதமர் மோடி
அடுத்த செய்தி
மெமரி சிப் விலை உயர்வு - சீன ஸ்மார்ட்போன் சந்தை சரிவு

தொடர்புடைய செய்திகள்