Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ட்ரோன் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயி*ழப்பு

ட்ரோன் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயி*ழப்பு

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என்று 'எமர்ஜென்சி லாயர்ஸ்' கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சூடானில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சூடானின் தெற்கு டர்பூர் மாகாணத் தலைநகர் நியாலாவில் உள்ள மார்க்கெட் பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் இருந்துள்ளது. அப்போது திடீரென ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் பலத்த காயமடைந்தனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என்று 'எமர்ஜென்சி லாயர்ஸ்' கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு சூடான் ராணுவமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வட ஆப்ரிக்காவில் அமைந்துள்ள சூடான் நாட்டில் 2021-ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ராணுவத்துடன் தங்களை இணைக்க அதிவிரைவு ஆதரவு படையினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால், 2023-ம் ஆண்டில் இருந்து இரு தரப்பினரிடையே மோதல் நீடிக்கிறது.

முந்தைய செய்தி
டிவிஎஸ் மோட்டார் Q2 வருவாய் 44% உயர்வு
அடுத்த செய்தி
AI token use may jump 78% as falling prices fail to guarantee lower costs

தொடர்புடைய செய்திகள்