Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளி பண்டிகைக்கு 100 சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டம்!

தீபாவளி பண்டிகைக்கு 100 சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டம்!

தெற்கு ரயில்வே விரைவில் சிறப்பு ரயில்களை அறிவிக்க உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு 85 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு 95 முதல் 100 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

வரும் நவ. 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு மறுநாளான திங்கள்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு, திங்கள் என்று தொடர்ந்து 3 நாள் விடுமுறையும் வருவதால், சென்னையிலிருந்து பலர் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், வெளியூர்களுக்கு செல்லும் ரயில்களிலும் 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவுகள் நிறைவடைந்தன. இந்த கூடுதல் விடுமுறையால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்கெனவே சிறப்பு பேருந்துகளை அறிவித்து உள்ளது. வெளியூர்களில் இருந்து நவ.9, 10 தேதிகளில் சென்னை திரும்ப வழக்கமான 4,382பேருந்துகளுடன், கூடுதலாக 6,815சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 11,199 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும், தெற்கு ரயில்வே விரைவில் சிறப்பு ரயில்களை அறிவிக்க உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு 85 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு 95 முதல் 100 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, சென்னையில் இருந்து நவ.5 முதல் நவ.10 வரை செங்கோட்டை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, பெங்களூரு, கொல்லம் , மன்னார்குடி மற்ரும் வட மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட உள்ளன. தற்போது இயக்கப்பட்டு வரும் சென்னை சென்ட்ரல் -போத்தனூர், சென்னை எழும்பூர்-மதுரை உள்ளிட்ட சிறப்பு ரயில்களையும் நீட்டிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

முந்தைய செய்தி
கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி!
அடுத்த செய்தி
கடல் கண்ணிவெடியில் சிக்கி 4 எண்ணெய் கப்பல்கள் தீப்பிடிப்பு

தொடர்புடைய செய்திகள்