Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 44 காசுகள் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 44 காசுகள் சரிவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்தது.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை வர்த்தகத்தின் போது 44 காசுகள் சரிந்து, வர்த்தக நேர முடிவில் ரூ.94.82 ஆக குறைந்தது. தொடர்ந்து எட்டு நாட்கள் ரூபாயின் மதிப்பு உயர்வை பதிவு செய்த நிலையில், அதற்கு முட்டுக்கட்டை விழுந்தது.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓவை முன்னிட்டு அதிக அளவில் குவிந்த வெளிநாட்டு முதலீடுகள், ரூபாயின் மதிப்பைத் தற்காத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக புதன்கிழமை வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 53 காசுகள் உயர்ந்து ரூ.94.38 ஆக உயர்ந்தது. இது கடந்த 6 வாரங்களில் இல்லாத உச்சம் ஆகும். 


இதனிடையே, அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் தொடங்கிய போது, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.94.47 ஆக இருந்தது. தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகள் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்தது. ஒரு கட்டத்தில் ரூ.94.94 என்ற அளவையும் எட்டியது. இறுதியில் ரூ.94.82 ஆக நிலைபெற்றது.


இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறியதாவது: சவுதி அரேபியாவின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஹவுதி கிளர்ச்சிப் படையினர் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதால், மேற்காசியாவில் போர் பதற்றம் மீண்டும் நிலவுகிறது. இதன் தாக்கத்தால், சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை 112 டாலரை தாண்டியது. 

அதே நேரத்தில், முக்கிய கரன்சிகளுக்கு எதிரான டாலர் குறியீட்டில் ஏற்பட்ட இறக்கம், அமெரிக்க அரசு பத்திரங்களின் வருவாய் விகிதங்கள் குறைந்தது ஆகியவை ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடைவதை ஓரளவுக்குத் தடுத்தன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

முந்தைய செய்தி
போலந்து பிரதமருடன் நரேந்திர மோடி சந்திப்பு: பாதுகாப்பு துறையில் ஒத்துழைக்க முடிவு
அடுத்த செய்தி
ஜெர்மனி உடனான வர்த்தகம்: 310 பில்லியன் யூரோவாக உயர்த்த இலக்கு

தொடர்புடைய செய்திகள்