Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.95,250 கோடி கடன் பெறுகிறது அராம்கோ

ரூ.95,250 கோடி கடன் பெறுகிறது அராம்கோ

அராம்கோ நிறுவனம் பெறப்போகும் கடன் வசதியின் இந்திய மதிப்பு சுமார் ரூ.95,250 கோடி.

பகிரவும் WhatsApp Facebook

மத்திய கிழக்கில் வெடித்துள்ள போர் மோதல்கள் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தலாக உள்ள நிலையில், தனது நிதி ஆதாரத்தை வலுப்படுத்த சவுதி அராம்கோ நிறுவனம் 10 பில்லியன் டாலர் கடன் பெறுவதற்காக சர்வதேச வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சவுதி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த எண்ணெய் நிறுவனத்துக்கும், வங்கிகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் கையெழுத்தாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அராம்கோ நிறுவனம் பெறப்போகும் கடன் வசதியின் இந்திய மதிப்பு சுமார் ரூ.95,250 கோடி.


எண்ணெய் விலை உயர்வால் அராம்கோ பலனடைந்தாலும், அதன் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களும், ஏற்றுமதியில் ஏற்படும் இடையூறுகளும் நிறுவனத்துக்குச் சவாலாக உள்ளன. இந்தச் சூழலில் நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் இந்த முயற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.


ஜேபி மோர்கன் சேஸ், சிட்டி குரூப், ஹெச்எஸ்பிசி, பேங்க் ஆஃப் சைனா, இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆஃப் சைனா, ஜப்பானின் மிட்சுபிஷி யுஎஃப்ஜி நிதிக் குழுமம் ஆகியவை இந்த ஏற்பாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இது ‘சுழற்சி கடன் வசதி’ ஆகும். ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்புக்குள் தேவைக்கேற்ப பணத்தைப் பெறவும், திருப்பிச் செலுத்திய தொகையை மீண்டும் பயன்படுத்தவும் முடியும். எனவே, ரூ.95,250 கோடி முழுவதையும் அராம்கோ உடனடி கடனாகப் பெற வேண்டியதில்லை.


இதற்கான வட்டி, அமெரிக்க டாலர் கடன்களுக்கான ‘எஸ்ஓஎஃப்ஆர்’ அடிப்படை விகிதத்தைவிட 0.60 சதவீதப் புள்ளி அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது மொத்த வட்டி விகிதம் அல்ல; அடிப்படை விகிதத்துடன் சேர்க்கப்படும் கூடுதல் அளவாகும்.


பேச்சுவார்த்தை குறித்து அராம்கோவும், சில வங்கிகளும் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளன. ஒப்பந்தம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

முந்தைய செய்தி
ரூ.160க்கு விற்பனையாகும் சின்ன வெங்காயம்: பொதுமக்கள் கவலை
அடுத்த செய்தி
ரூ.45.72 லட்சம் கோடி சந்தை மதிப்பு இழப்பு

தொடர்புடைய செய்திகள்