Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது பாலியல் புகார்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது பாலியல் புகார்

33 ஆண்டுகளுக்குப் பிறகு சுவிட்சர்லாந்து பெண் குற்றச்சாட்டு

பகிரவும் WhatsApp Facebook

டொனால்டு ட்ரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 33 ஆண்டுகளுக்குப் பிறகு சுவிட்சர்லாந்து பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளு​மன்​ற பிரதி​நி​தி​கள் சபையின் நீதித் ​துறைக் குழு​வைச் சேர்ந்த ஜனநாயகக் கட்​சி​யினர் 53 பக்க அறிக்​கை​ஒன்றை வெளி​யிட்​டுள்ளனர். அதில், ஜனநாயகக் கட்சியினர் நடத்​திய நேர்​காணல்​களில், சுவிட்​சர்​லாந்து முன்னாள் அழகி பியாட்​ரிஸ் கியூல் என்பவர், அதிபர் ட்ரம்புக்கு எதிராக தெரி​வித்த கருத்​துகள் இடம் பெற்​றுள்​ளன.


அந்த அறிக்​கை​யில் பியாட்​ரிஸ் கியூல் கூறி​யிருப்​ப​தாவது: 1993-ம் ஆண்டு எனக்கு 24 வயது. நியூயார்க்​கில் உள்ள பிளாசா ஹோட்டலில் நடந்த அழகிப் போட்​டி​யில் கலந்துகொண்டேன். அமெரிக்க அதிபர் ட்​ரம்ப்பை அங்கு முதன்முதலில் சந்​தித்​ன். அப்போது அந்த ஹோட்​டல் ட்ரம்ப்புக்​குச் சொந்​த​மானதாக இருந்​தது.


பிளாசா ஹோட்​டலின் மேல்​தளத்​தில் உள்ள ஒரு அறைக்கு வரு​மாறு, ட்ரம்பின் பிரதி​நிதி ஒரு​வர் என்னை அழைத்​தார். அந்த அறைக்​குள் நான் நுழைந்​ததும், ட்​ரம்ப் என்னை வலுக்​கட்​டாய​மாகப் பாலியல் வன்​கொடுமை செய்​தார். எனது உடை கிழிந்​ததுடன், ரத்​தக்​ காயங்​களும் ஏற்​பட்​டன. இவ்​வாறு கியூல் தெரி​வித்​துள்​ளார்.

முந்தைய செய்தி
காப்பீட்டு துறை சீர்திருத்த அமலாக்கம்: IRDAI தலைவர் கருத்து
அடுத்த செய்தி
காலநிலை மாற்றத்தை சுகாதார அவசர நிலையாக அறிவிக்க வலியுறுத்தல்

தொடர்புடைய செய்திகள்