Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காலநிலை மாற்றத்தை சுகாதார அவசர நிலையாக அறிவிக்க வலியுறுத்தல்

காலநிலை மாற்றத்தை சுகாதார அவசர நிலையாக அறிவிக்க வலியுறுத்தல்

77 நாடுகளில் சுமார் 3.23 லட்சம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

உலக அளவில் 2016 முதல் 2023 வரை வெப்பத்தால் 30 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், காலநிலை மாற்றத்தை ‘உலகளாவிய சுகாதார அவசரநிலை’யாக அறிவிக்க வேண்டும் என்று லான்செட் ஆய்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.

நவம்பரில் நடைபெறவுள்ள காப்–31 காலநிலை மாநாட்டுக்கு முன்னதாக, லான்செட் மருத்துவ இதழ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. பத்தாவது ஆண்டாக வெளியான இந்த ஆய்வில், 30 நாடுகளைச் சேர்ந்த 146 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.


2023-ம் ஆண்டில் மட்டும் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக 7.10 லட்சத்தை எட்டின. இவற்றில் 70 சதவீதத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள், மனிதச் செயல்பாடுகளால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையவை என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
எட்டு ஆண்டுகளில் ஏற்பட்ட 30 லட்சம் உயிரிழப்புகளில், 68 சதவீதத்துக்கு காலநிலை மாற்றமே நேரடிக் காரணம் என லான்செட் கவுன்ட்டவுன் செயல் இயக்குநர் மரினா ரொமானெல்லோ தெரிவித்தார்.


ஒவ்வொரு பேரிடருக்கும் தனித்தனியாக நடவடிக்கை எடுப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், நாடுகளின் முன்னெச்சரிக்கைத் திறனையும் பாதிப்புகளைச் சமாளிக்கும் ஆற்றலையும் மேம்படுத்தும் ஒருங்கிணைந்த நீண்டகாலத் திட்டம் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.


வெப்ப உயர்வால் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறைந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்துக்கு ஆண்டுதோறும் $1 டிரில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீதமாகவும், ஆப்பிரிக்காவில் 3.2 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டில் தூய எரிசக்தி முதலீடு $2.1 டிரில்லியனை எட்டியது. இருப்பினும், உலக எரிசக்தியில் புதைபடிவ எரிபொருட்களின் பங்கு இன்னமும் 80 சதவீதமாக உள்ளது. அவற்றால் ஏற்படும் காற்று மாசுபாட்டுக்கு ஆண்டுதோறும் 27.3 லட்சம் பேர் உயிரிழப்பதாக அறிக்கை கூறுகிறது.


அதேநேரத்தில், 2016-க்குப் பிறகு புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டால் ஏற்படும் காற்று மாசுபாடு குறைந்த குறைந்தது 77 நாடுகளில் சுமார் 3.23 லட்சம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுகாதாரப் பாதுகாப்பை மையமாகக் கொண்டு அரசுகள் தங்கள் காலநிலைக் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தினர்.

முந்தைய செய்தி
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது பாலியல் புகார்
அடுத்த செய்தி
Free coaching for railway exams in Karur

தொடர்புடைய செய்திகள்