Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உக்ரைனின் 900 ட்ரோன்களைத் தடுத்த ரஷ்யா

உக்ரைனின் 900 ட்ரோன்களைத் தடுத்த ரஷ்யா

உக்ரைனின் சுமார் 900 ஆளில்லா விமானங்களை வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஒரே இரவில் உக்ரைனின் சுமார் 900 ஆளில்லா விமானங்களை வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பல்வேறு பகுதிகள், ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பம், அசோவ் கடல் ஆகியவற்றுக்கு மேலே இந்த ட்ரோன்கள் தடுக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியுள்ளது.

மாஸ்கோ பிராந்தியத்தில் பெரிய எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் தீ ஏற்பட்டதாகவும், தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகவும் ஊடகத் தகவல்கள் வெளியாகின. எனினும், இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.


திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை மாஸ்கோ பிராந்தியத்தை நோக்கி 650 ட்ரோன்கள் வந்ததாக நகர மேயர் செர்கெய் சோபியானின் தெரிவித்தார். பெரும்பாலானவை தொலைவிலேயே அழிக்கப்பட்டதாகவும், நகரத்தை நெருங்கிய 105 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார். செவ்வாய்க்கிழமை பகலில் மேலும் 68 ட்ரோன்கள் தடுக்கப்பட்டதாக அவர் பின்னர் தெரிவித்தார்.


இதற்கிடையே, ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். புதிதாகக் கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவசரப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் அவர் கூறியுள்ளார்.


ரஷ்யாவிடம் 600 பாலிஸ்டிக் ஏவுகணைகள் கையிருப்பில் இருப்பதாகவும், மாதத்துக்கு 140 வரை தயாரிக்க முடியும் என்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான வெடிபொருட்கள் பற்றாக்குறை உக்ரைனுக்கு சவாலாக உள்ளது.
தெற்கு உக்ரைனின் ஜப்போரிஜியா நகரில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை ரஷ்யா தாக்கியதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இதனால் பாலத்தில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. குடியிருப்புக் கட்டிடம் மீதான இரவுத் தாக்குதலில் ஐவர் காயமடைந்தனர். கிடங்கு மீதான பகல் தாக்குதலில் பெரிய தீ ஏற்பட்டது.
கருங்கடலில் மார்ஷல் தீவுகளின் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்; ஏழு பேர் காயமடைந்தனர் என்று ஒடேசா ஆளுநர் ஒலே கிபர் தெரிவித்தார். அந்தக் கப்பலில் ரேப்சீட் எண்ணெய் எடுத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரில், உள்நாட்டில் தயாரித்த தொலைதூர ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவுக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. உரால் மற்றும் சைபீரியா வரையிலான இலக்குகளையும் தாக்கியுள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் சேமிப்புக் கிடங்குகளும் தொடர்ந்து குறிவைக்கப்படுகின்றன. அதேவேளையில், உக்ரைனின் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

முந்தைய செய்தி
ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு
அடுத்த செய்தி
Changes in Tirupati train services from October 8 to November 9

தொடர்புடைய செய்திகள்