Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எச்சரிக்கையுடன் இருங்கள் - இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

எச்சரிக்கையுடன் இருங்கள் - இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

பிரான்ஸில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

பிரான்ஸில் நடைபெறும் போராட்டங்களில் வன்முறை வெடித்ததால் பாரிஸ், லில்லி, லியோன், நைஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அடுத்தகட்டப் போராட்டம் நடத்த அரசுக்கு எதிரான குழுக்கள் திட்டமிட்டுள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.


இந்நிலையில், பிரான்ஸில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் பிரான்ஸுக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்கான அறிவுறுத்தல்களை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பிரான்ஸின் பதற்றமான சூழல் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.

 போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
உள்ளூர் தகவல்கள் மூலம் அப்பகுதியின் சூழலை அறிந்துகொண்டு, அதன்படி முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். 

உதவி தேவைப்பட்டால் பாரிஸில் உள்ள இந்திய தூதரகத்தை +33 6 48 34 00 63 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வழியாகவோ தொடர்பு கொள்ளலாம்.

 மார்சேய் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை +33 7 43 16 25 59 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ளலாம். இவ்வாறு இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.


முந்தைய செய்தி
மேட்டூரிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு 50% குறைப்பு
அடுத்த செய்தி
No planning permission granted to Bashyam Group’s Nungambakkam property, says CMDA

தொடர்புடைய செய்திகள்