Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அதானி குழும பங்குகள் உயர்வு

அதானி குழும பங்குகள் உயர்வு

ஏசிசி நிறுவனப் பங்கு 1.91 சதவீதம் உயர்ந்து ரூ.1,151.60-ஆகவும், அதானி பவர் பங்கு 3.36 சதவீதம் உயர்ந்து ரூ.195.35-ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

பகிரவும் WhatsApp Facebook

அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம் ரூ.14,500 கோடி மதிப்பிலான விரிவாக்கத் திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் உயர்ந்தன.

அம்புஜா சிமென்ட்ஸ் பங்கு வர்த்தகத்தின்போது அதிகபட்சமாக 5.27 சதவீதம் உயர்ந்து ரூ.366.40-ஐ எட்டியது. வர்த்தக முடிவில், முந்தைய முடிவு விலையைவிட 3.49 சதவீதம் உயர்ந்து ரூ.360.20-ஆக நிலைத்தது.

ஏசிசி நிறுவனப் பங்கு 1.91 சதவீதம் உயர்ந்து ரூ.1,151.60-ஆகவும், அதானி பவர் பங்கு 3.36 சதவீதம் உயர்ந்து ரூ.195.35-ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

அதானி என்டர்பிரைசஸ் பங்கு 1.40 சதவீதம் உயர்ந்து ரூ.2,615.40-ஆகவும், அதானி கிரீன் எனர்ஜி பங்கு 2.95 சதவீதம் உயர்ந்து ரூ.1,337.00-ஆகவும், அதானி டோட்டல் கேஸ் பங்கு 2.83 சதவீதம் உயர்ந்து ரூ.549.60-ஆகவும் முடிவடைந்தன.

அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம் 2030-ஆம் நிதியாண்டுக்குள் தனது உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 15.5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. தற்போது அதன் உற்பத்தித் திறன் 11.35 கோடி டன்னாக உள்ளது.

புதிய விரிவாக்கத் திட்டத்தின்கீழ் மேற்கு இந்தியாவில் 1.55 கோடி டன், கிழக்கு இந்தியாவில் 1.16 கோடி டன், வட இந்தியாவில் 29 லட்சம் டன் அரவைத் திறன் கூடுதலாக உருவாக்கப்பட உள்ளது.

அசாம், பிஹார், ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்த விரிவாக்கத்தின் மூலம் போக்குவரத்துச் செலவைக் குறைத்து, உற்பத்தித் திறனை மேம்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், 2028-ம் நிதியாண்டுக்குள் ஒரு டன் சிமென்ட் உற்பத்திச் செலவை ரூ.4,000-ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.1.83 லட்சம் கோடி அதிகரிப்பு
அடுத்த செய்தி
சென்செக்ஸ் 1,233 புள்ளிகள் உயர்வு: ரிலையன்ஸ் பங்கு ஏற்றம், கச்சா எண்ணெய் விலை சரிவு

தொடர்புடைய செய்திகள்