Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.1.83 லட்சம் கோடி அதிகரிப்பு

ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.1.83 லட்சம் கோடி அதிகரிப்பு

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1.83 லட்சம் கோடி அதிகரித்தது.

பகிரவும் WhatsApp Facebook

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் சாதனை லாபத்தை பதிவு செய்ததையடுத்து, திங்கள்கிழமை அதன் பங்குகள் ஏறத்தாழ 12 சதவீதம் உயர்ந்தன. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1.83 லட்சம் கோடி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் பங்கு 11.64 சதவீதம் உயர்ந்து ரூ.1,299 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் 11.59 சதவீதம் அதிகரித்து ரூ.1,300 ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 2020 ஏப்ரல் 7-க்குப் பிறகு ஒரே நாளில் பதிவான மிகப்பெரிய உயர்வு இதுவாகும்.


நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.17.58 லட்சம் கோடியாக உயர்ந்தது. சென்செக்ஸ், நிஃப்டி பட்டியல்களில் அதிகம் உயர்ந்த பங்காக ரிலையன்ஸ் திகழ்ந்தது.
ஜூலை–செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் முந்தைய ஆண்டைவிட 33.8 சதவீதம் அதிகரித்து ரூ.29,550 கோடியை எட்டியது. ஒருங்கிணைந்த வருவாய் 27.8 சதவீதம் உயர்ந்து ரூ.3.62 லட்சம் கோடியானது.


எண்ணெய்–ரசாயன வணிகத்தின் மீட்சியும், தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியும் லாப உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. சில்லறை வர்த்தகத்தின் செயல்பாடு ஒப்பீட்டளவில் மந்தமாக இருந்தது.


ரிலையன்ஸ் பங்கின் இலக்கு விலையை ரூ.1,710 ஆக ஜெஃப்ரீஸ் நிர்ணயித்துள்ளது. இது முந்தைய குறிப்பு விலையிலிருந்து 47 சதவீத உயர்வைக் குறிக்கிறது.
அதேநேரம், நோமுரா நிறுவனம் இலக்கு விலையை ரூ.1,690-லிருந்து ரூ.1,560 ஆக, சுமார் 7.7 சதவீதம் குறைத்துள்ளது. இருப்பினும், 34 சதவீத உயர்வுக்கு வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது. சில்லறை வணிகப் பிரிவின் லாபம் குறைந்திருப்பதே நோமுராவின் எச்சரிக்கையான மதிப்பீட்டுக்குக் காரணமாகும்.


நுவாமா நிறுவனம் ரிலையன்ஸ் பங்கின் இலக்கு விலையை ரூ.1,703-ஆக நிர்ணயித்துள்ளது. மற்ற தரகு நிறுவனங்களும் சாதகமான மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி
தீபாவளி முதலீட்டுக்கு 10 பங்குகள் - ஜியோஜித் பரிந்துரை
அடுத்த செய்தி
அதானி குழும பங்குகள் உயர்வு

தொடர்புடைய செய்திகள்