Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்செக்ஸ் 1,233 புள்ளிகள் உயர்வு: ரிலையன்ஸ் பங்கு ஏற்றம், கச்சா எண்ணெய் விலை சரிவு

சென்செக்ஸ் 1,233 புள்ளிகள் உயர்வு: ரிலையன்ஸ் பங்கு ஏற்றம், கச்சா எண்ணெய் விலை சரிவு

டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், பாரத ஸ்டேட் வங்கி, என்டிபிசி, மாருதி சுஸுகி பங்குகளும் உயர்ந்தன.

பகிரவும் WhatsApp Facebook

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் வலுவான ஏற்றம், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் சரிவு ஆகியவற்றால் இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று கணிசமாக உயர்ந்தன. சென்செக்ஸ் 1,233.25 புள்ளிகளும், நிஃப்டி 387.70 புள்ளிகளும் அதிகரித்தன.

தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்ட மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 1.66 சதவீதம் உயர்ந்து 75,692.78 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி, 1.68 சதவீதம் அதிகரித்து 23,440.80 புள்ளிகளில் நிலைபெற்றது. இரு குறியீடுகளும் நேற்றைய அதிகபட்ச அளவில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு 11.64 சதவீதம் உயர்ந்தது. ஜூலை–செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம், முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட 33.8 சதவீதம் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவாக ரூ.29,550 கோடியை எட்டியது. எண்ணெய்–ரசாயனப் பிரிவின் மேம்பட்ட செயல்பாடும், தொலைத்தொடர்புப் பிரிவின் வளர்ச்சியும் இதற்குத் துணைபுரிந்தன.

டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், பாரத ஸ்டேட் வங்கி, என்டிபிசி, மாருதி சுஸுகி பங்குகளும் உயர்ந்தன. இன்ஃபோசிஸ், கோடக் மகிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா பங்குகள் சரிந்தன.
சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 4.46 சதவீதம் வீழ்ச்சியடைந்து, பீப்பாய்க்கு 108.7 அமெரிக்க டாலராக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை ரூ.3,598.54 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதும் சந்தைக்கு ஆதரவளித்தது.

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல், ஆண்டுக்கு ஆண்டு 23 சதவீதம் அதிகரித்து ரூ.2.31 லட்சம் கோடியைக் கடந்தது. இது இரண்டாவது அதிகபட்ச வசூலாகும். பண்டிகைக்காலத் தேவையால் உள்நாட்டு பயணிகள் வாகன அனுப்புகையும் சாதனை அளவாக ஐந்து லட்சத்தைக் கடந்தது.
எதிர்பார்ப்பைவிடச் சிறந்த காலாண்டு முடிவுகள், வலுவான உள்நாட்டுத் தேவை, எண்ணெய் விலை குறைவு மற்றும் அமெரிக்கா–ஈரான் இடையிலான புதுப்பிக்கப்பட்ட தூதரக முயற்சிகள் முதலீட்டாளர் நம்பிக்கையை உயர்த்தியதாக ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆய்வுத் தலைவர் வினோத் நாயர் தெரிவித்தார்.

ஆசியாவில் தென்கொரியா, சீனா, ஹாங்காங் சந்தைகள் உயர்ந்தன; ஜப்பான் சந்தை சரிந்தது. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
அந்நிய முதலீட்டு வரவும் நேர்மறையான உள்நாட்டுப் பொருளாதாரத் தரவுகளும் இந்திய பங்குச் சந்தையின் ஏற்றத்துக்குக் கூடுதல் வலுசேர்த்தன.

முந்தைய செய்தி
அதானி குழும பங்குகள் உயர்வு
அடுத்த செய்தி
செபி எச்சரிக்கையால் பிசி ஜுவல்லர் பங்கு 3.62% சரிவு

தொடர்புடைய செய்திகள்