Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கேப்ரியல் இந்தியா பங்குக்கு ரூ.1,500 இலக்கு விலை

கேப்ரியல் இந்தியா பங்குக்கு ரூ.1,500 இலக்கு விலை

சென்னையிலும் புணேயிலும் புதிய உற்பத்தி வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

வாகன உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனமான கேப்ரியல் இந்தியாவின் பங்கு இலக்கு விலையை ரூ.1,315-லிருந்து ரூ.1,500-ஆக சாய்ஸ் ஈக்விட்டி புரோக்கிங் உயர்த்தியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 22.9% அதிகரித்து ரூ.1,608 கோடியாகவும், சரிசெய்யப்பட்ட நிகர லாபம் 15.4% உயர்ந்து ரூ.123.1 கோடியாகவும் பதிவாகியுள்ளது.


ஃபோர்வியா நிறுவனத்துடனான கூட்டுத் தொழில் முயற்சியால் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சென்னையிலும் புணேயிலும் புதிய உற்பத்தி வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன.


நவம்பர் 2 நிலவரப்படி பங்கின் விலை ரூ.1,419 எனக் குறிப்பிட்டுள்ள ஆய்வறிக்கை, மேலும் 5.7% உயர வாய்ப்புள்ளதாக மதிப்பிட்டுள்ளது. பங்குக்கான பரிந்துரையை ‘ரெட்யூஸ்’ நிலையிலிருந்து ‘ஆட்’ நிலைக்கு உயர்த்தியுள்ளது.

முந்தைய செய்தி
புதிய சிறைக்கு மாற்றப்பட்ட குர்து தலைவர் ஒஜலான்
அடுத்த செய்தி
தானாக ஓடி தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள்

தொடர்புடைய செய்திகள்