Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ட்ரம்ப் மகனின் காதலி பதவி விலகல்

ட்ரம்ப் மகனின் காதலி பதவி விலகல்
கிம்பர்லி கில்ஃபாய்ல்

கிம்பர்லி கில்ஃபாய்லை பதவி விலகுமாறு ட்ரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகன் டொனால்டு ட்ரம்ப் ஜூனியரின் முன்னாள் காதலியான கில்ஃபாய்ல், கிரீஸ் நாட்டுக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றி வந்தார்.

இவர், அரசியல் நன்கொடையாளரிடம் 1 லட்சம் டாலர் பெற்று, அதற்குப் பதிலாக நிர்வாக அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தித் தர முன்வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், பரிசுகள் மற்றும் சலுகைகள் பெற்றதாகவும் அவர் மீது புகார்கள் எழுந்தன.

 
எனவே, கிம்பர்லி கில்ஃபாய்லை பதவி விலகுமாறு ட்ரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை கில்ஃபாய்ல் மறுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் கண்காணிப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.


முந்தைய செய்தி
The not-so-secret vulnerability in Ukraine's drone arsenal? Chinese technology
அடுத்த செய்தி
போப் லியோவுக்கு நுரையீரல் புற்றுநோய் கட்டி அகற்றம்

தொடர்புடைய செய்திகள்