Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் Q2 நிகர லாபம் 20% அதிகரிப்பு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் Q2 நிகர லாபம் 20% அதிகரிப்பு

ஒட்டுமொத்த கடன் வழங்கல் 22 சதவீதம் அதிகரித்து, ரூ.3,864 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.3,170 கோடியாக இருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 20 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 90 கோடியை அடைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.75 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்த கடன் வழங்கல் 31 சதவீதம் அதிகரித்து, ரூ.2,199 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.1,681 கோடியாக இருந்தது.

நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 14% அதிகரித்து, ரூ.21,213 கோடியாக உள்ளது. மலிவு விலை வீட்டு வசதிக் கடன்கள் மற்றும் சிறிய அளவிலான கடன்களை உள்ளடக்கிய 'வளர்ந்து வரும் வணிகப் பிரிவில்' கடன் வழங்கல் 63 சதவீதம் அதிகரித்து ரூ.238 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்த கடன் வழங்கல் 22 சதவீதம் அதிகரித்து, ரூ.3,864 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.3,170 கோடியாக இருந்தது.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிர்வாக இயக்குநர் டி.லட்சுமிநாராயணன் கூறுகையில், “இந்த ஆண்டின் முதல் பாதியில், தென்னிந்திய சந்தையில் உள்ள சிறிய நகரங்களுக்கு எங்கள் கிளை வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளோம். கடந்த 12 மாதங்களில் சுமார் 50 புதிய கிளைகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், முதல் பாதியில் எங்களது ‘எமர்ஜிங் பிசினஸ்’ பிரிவின் கடன் விநியோகம் கிட்டத்தட்ட இருமடங்காகி, ரூ.418 கோடியை எட்டியுள்ளது” என்றார்.

முந்தைய செய்தி
நீதிமன்றத்தில் சரணடைந்தார் முன்னாள் எம்எல்ஏ: நவ. 12ம் தேதி வரை நீதிமன்றக் காவல்
அடுத்த செய்தி
நவம்பர் 1 முதல் மியூச்சுவல் ஃபண்டுகளில் ‘டைரக்ட் பிளான்’ இயல்புநிலைத் தேர்வு: செபி அறிவிப்பு!

தொடர்புடைய செய்திகள்