Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நீதிமன்றத்தில் சரணடைந்தார் முன்னாள் எம்எல்ஏ: நவ. 12ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

நீதிமன்றத்தில் சரணடைந்தார் முன்னாள் எம்எல்ஏ: நவ. 12ம் தேதி வரை நீதிமன்றக் காவல்
சென்னையில் ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார்.

இந்த வழக்கில் அரசக்குமார், ராஜா, சுரேஷ், அன்பில் மகேஷ் ஆகியோர் கைதான நிலையில், அன்பில் மகேஷ் தவிர மற்ற மூவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் தலைமறைவாகி இருந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நவம்பர் 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திமுக ஆட்சிக் காலத்தில் நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாகக் கூறி, மோசடி நடைபெற்றதாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் தரப்பில் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ரூ.400 கோடிக்கு மேல் லஞ்சமாக வசூலித்ததாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், ராஜா, சுரேஷ், தினேஷ் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசக்குமார், ராஜா, சுரேஷ், அன்பில் மகேஷ் ஆகியோர் கைதான நிலையில், அன்பில் மகேஷ் தவிர மற்ற மூவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். முன் ஜாமீன் கோரிய முத்துக்குமாரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு முத்துக்குமார் நேற்று சரணடைந்தார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்துக்குமார், பின்னர் திமுகவில் இணைந்து அன்பில்மகேஷ்க்கு நெருக்கமானவராக மாறியதோடு, திமுக ஆட்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.

முந்தைய செய்தி
டைனோசர்களை அழித்த விண்கல்: உலகை ஆக்கிரமிக்க எறும்புகளுக்கு உதவியதா?
அடுத்த செய்தி
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் Q2 நிகர லாபம் 20% அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்