Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஐபிஓ ஆவணங்களை வெளியிட்டது ஆந்த்ரோபிக்

ஐபிஓ ஆவணங்களை வெளியிட்டது ஆந்த்ரோபிக்

எதிர்காலப் பங்கு வெளியீட்டுக்கும் ஆந்த்ரோபிக்கின் பங்கு வெளியீடு முக்கியத்துவம் பெறுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

கிளாட் செயற்கை நுண்ணறிவு சேவையை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனம், அமெரிக்கப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டு ஆவணங்களை வெளியிட்டது.

செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆந்த்ரோபிக்கின் இந்த நடவடிக்கை, அதன் பங்குச் சந்தை நுழைவுக்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. நிறுவனத்தின் வேகமான வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான பெரும் செலவுகள், வணிகச் சவால்கள் ஆகியவற்றை முதலீட்டாளர்களுக்கான ஆவணங்கள் விவரிக்கின்றன.


2021ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் குழுவால் தொடங்கப்பட்ட ஆந்த்ரோபிக்கின் மதிப்பு, கடந்த மே மாதம் நடைபெற்ற நிதித்திரட்டலின்போது 965 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டது. சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் வால் ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த முக்கிய முதலீட்டாளர்கள் அந்த நிதித்திரட்டலில் பங்கேற்றனர்.
அமேசான், கூகுள் ஆகிய நிறுவனங்கள் ஆந்த்ரோபிக்கின் ஆரம்பகால முதலீட்டாளர்களாக உள்ளன. பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ள இந்நிறுவனங்கள், கிளாட் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயிற்றுவிக்கவும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் தேவையான கிளவுட் உள்கட்டமைப்பையும் வழங்குகின்றன.


ஆந்த்ரோபிக்கின் ஐபிஓவுக்கு கிடைக்கும் வரவேற்பு, முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் மதிப்பை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எவ்வாறு கணக்கிடுகிறார்கள் என்பதற்கான அளவுகோலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, போட்டி நிறுவனமான ஓபன் ஏஐயின் எதிர்காலப் பங்கு வெளியீட்டுக்கும் ஆந்த்ரோபிக்கின் பங்கு வெளியீடு முக்கியத்துவம் பெறுகிறது.


ஓபன் ஏஐ கடந்த ஜூன் மாதம் ரகசியமாக ஐபிஓ விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தது. அந்நிறுவனத்தின் பங்குகள், 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே, செயற்கை நுண்ணறிவுத் துறையில் அதிகரிக்கும் முதலீடுகள் பங்கு விலைகளை உயர்த்தியிருந்தாலும், மிகையான நிறுவன மதிப்பீடுகள் மற்றும் பெருகும் கடன்கள் குறித்த கவலைகளும் நிலவுகின்றன. புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான செலவுகளும் அவற்றின் பாதுகாப்பு அபாயங்களும் ஆந்த்ரோபிக் எதிர்கொள்ளும் முக்கியச் சவால்களாக உள்ளன.


முன்னதாக, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஜூன் மாதத்தில் ஐபிஓ மூலம் 75 பில்லியன் டாலர் திரட்டி சாதனை படைத்தது. அந்த வெளியீட்டின்போது நிறுவனத்தின் மதிப்பு 1.75 டிரில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் ஆந்த்ரோபிக்கின் பங்கு வெளியீடு, தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் மற்றொரு முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
லாபப் பாதையை எட்டியது ஏத்தர் எனர்ஜி
அடுத்த செய்தி
ஓலா எலெக்ட்ரிக் பங்கு உரிமைகள் 1.21 கோடியை விற்ற சாஃப்ட்பேங்க்

தொடர்புடைய செய்திகள்