Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

லாபப் பாதையை எட்டியது ஏத்தர் எனர்ஜி

லாபப் பாதையை எட்டியது ஏத்தர் எனர்ஜி

ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் 20.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பாளரான ஏத்தர் எனர்ஜி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2026–27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.1.26 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. வருவாய் அதிகரிப்பும் செலவுக் கட்டுப்பாடும் நிறுவனத்தின் இந்த முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைந்துள்ளன.

ஏத்தர் எனர்ஜி வெளியிட்ட காலாண்டு நிதிநிலை முடிவுகளின்படி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.154.07 கோடி நிகர நஷ்டத்தைச் சந்தித்திருந்தது. முந்தைய ஜூன் காலாண்டிலும் ரூ.51.09 கோடி நஷ்டம் பதிவாகியிருந்த நிலையில், தற்போது லாபத்துக்கு மாறியுள்ளது.


நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், முந்தைய ஆண்டைவிட 62.9 சதவீதம் உயர்ந்து ரூ.1,464.24 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.898.88 கோடியாக இருந்தது. ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் 20.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதர வருமானமான ரூ.62.71 கோடியையும் சேர்த்து, மொத்த வருமானம் ரூ.1,526.95 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்தச் செலவுகள் சுமார் ரூ.1,526 கோடியாக உள்ளன. செயல்பாட்டு வருவாயைவிடச் செலவுகள் அதிகமாக இருந்ததால், நிகர லாபத்தை அடைவதில் இதர வருமானம் முக்கியப் பங்காற்றியுள்ளது.


இதனிடையே, உற்பத்தித் திறனை விரிவுபடுத்த சுமார் ரூ.122 கோடி முதலீட்டுக்கு நிறுவன இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டின் ஓசூர் ஆலையிலும், மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் அமையும் புதிய ஆலையிலும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஓசூர் ஆலையின் ஆண்டு உற்பத்தித் திறன் 4.20 லட்சத்திலிருந்து 4.95 லட்சம் வாகனங்களாக உயர்த்தப்படும். புதிய ஆலையின் திட்டமிட்ட திறன் ஐந்து லட்சத்திலிருந்து 6.50 லட்சமாக அதிகரிக்கப்படும். இரு ஆலைகளையும் சேர்த்து ஆண்டுக்கு கூடுதலாக 2.25 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும்.


காலாண்டு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பங்குச்சந்தையில் ஏத்தர் பங்குகளுக்கு வாங்கும் ஆர்வம் அதிகரித்தது. இரண்டாவது காலாண்டில் லாபம் ஈட்டியதாலும், வருவாய் சுமார் 63 சதவீதம் அதிகரித்ததாலும், ஏத்தர் எனர்ஜி பங்குகள் நேற்று முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தன. தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகத்தின்போது விலை ரூ.1,623 வரை உயர்ந்தது. நிதிநிலை முன்னேற்றம் வாங்கும் ஆர்வத்தை அதிகரித்த நிலையில், வர்த்தக முடிவில் பங்கு 14.13 சதவீதம் உயர்ந்து நிறைவடைந்தது. ஒரு பங்கின் நேற்றைய முடிவு விலை ரூ.1,575-ஆக இருந்தது.

முந்தைய செய்தி
பெரிய வெங்காயம் விலை ஒரே நாளில் ரூ.20 உயர்வு
அடுத்த செய்தி
ஐபிஓ ஆவணங்களை வெளியிட்டது ஆந்த்ரோபிக்

தொடர்புடைய செய்திகள்