Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆகஸ்டில் அதிகளவு சரக்கு கையாண்ட திருச்சி விமான நிலையம்

ஆகஸ்டில் அதிகளவு சரக்கு கையாண்ட திருச்சி விமான நிலையம்

ஆகஸ்ட் மாதத்தில் கையாளப்பட்ட சரக்குகளில் சுமார் 685 டன் பழங்கள், காய்கறிகள், பூக்கள், பால் பொருள்கள், மீன்கள், இறால்கள் உள்ளிட்ட அழுகக்கூடிய பொருள்களாகும்.

பகிரவும் WhatsApp Facebook

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சரக்குப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், சரக்கு முனையத்தை விரிவாக்கி நவீன வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருச்சி விமான நிலையத்தில் நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் 3,564.97 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. ஏப்ரலில் 505.42 டன், மே மாதத்தில் 536.31 டன், ஜூனில் 625.93 டன், ஜூலையில் 615.39 டன், ஆகஸ்டில் 721.64 டன், செப்டம்பரில் 560.28 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இதில், ஆகஸ்ட் மாத அளவு கடந்த 7 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மாதாந்திர அளவாகும். முதல் அரையாண்டு இலக்கான 4,000 டன்னுடன் ஒப்பிடும்போது 435.03 டன் குறைவாகக் கையாளப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் கையாளப்பட்ட சரக்குகளில் சுமார் 685 டன் பழங்கள், காய்கறிகள், பூக்கள், பால் பொருள்கள், மீன்கள், இறால்கள் உள்ளிட்ட அழுகக்கூடிய பொருள்களாகும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட தேவை அதிகரிப்பு சரக்குக் கையாளுதலுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.

2025–26 நிதியாண்டில் 7,184 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. முந்தைய நிதியாண்டின் 6,474 டன்னுடன் ஒப்பிடும்போது 710 டன், அதாவது சுமார் 11 சதவீதம் வளர்ச்சி பதிவாகியுள்ளது. உள்நாட்டு விமான சரக்கு சேவையும் தொடங்கப்பட்டு, முதல் நாளில் சுமார் 2.4 டன் சரக்குகள் கையாளப்பட்டன.

முந்தைய செய்தி
இந்திய ஜவுளித் துறை மதிப்பை 350 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு
அடுத்த செய்தி
இன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட உலகப் பங்குச் சந்தைகள்

தொடர்புடைய செய்திகள்