Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பெரிய வெங்காயம் விலை ஒரே நாளில் ரூ.20 உயர்வு

பெரிய வெங்காயம் விலை ஒரே நாளில் ரூ.20 உயர்வு

பெரிய வெங்காயத்தின் அறுவடைப் பருவம் முடிவடைந்ததால் வரத்து குறைந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வரத்து குறைந்ததால் கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து, மொத்த விற்பனையில் முதல் தரம் ரூ.80-க்கும், இரண்டாம் தரம் ரூ.65-க்கும், மூன்றாம் தரம் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வழக்கமாக தினமும் 8,000 முதல் 9,000 லோடு காய்கறிகள் வரும் நிலையில், தற்போது 5,000 லோடுகள் மட்டுமே வருவதாக கோயம்பேடு காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ். முத்துக்குமார் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், "பெரிய வெங்காயத்தின் அறுவடைப் பருவம் முடிவடைந்ததால் வரத்து குறைந்துள்ளது. வரத்து மேலும் குறைந்தால் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது. 

இதேபோல், கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த அக்.21 முதல் அக்.25 வரை பெரிய வெங்காயம் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக்.26-ல் ரூ.80-ஆக உயர்ந்துள்ளது" என்றார்.


முந்தைய செய்தி
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை - தமிழகத்தில் மழைப்பொழிவு?
அடுத்த செய்தி
லாபப் பாதையை எட்டியது ஏத்தர் எனர்ஜி

தொடர்புடைய செய்திகள்