Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,106 கோடி நிகர லாபம்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,106 கோடி நிகர லாபம்

இந்தியன் ஆயில் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.21,630 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பொதுத்துறையைச் சேர்ந்த 3 முன்னணி எண்ணெய் நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.30,106 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைவிட 68.3 சதவீதம் அதிகமாகும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) ஆகிய நிறுவனங்களின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மொத்த நிகர லாபம் ரூ.30,106 கோடியாக உள்ளது.
இது கடந்த 2025-26 நிதியாண்டில் இந்நிறுவனங்கள் ஈட்டிய ரூ.77,281 கோடி ஆண்டு லாபத்தில் சுமார் 39 சதவீதத்துக்கு சமம். முந்தைய ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்நிறுவனங்கள் ரூ.18,150 கோடி இழப்பைச் சந்தித்திருந்தன.


இதில் இந்தியன் ஆயில் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.21,630 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகமாகும்.
அதேநேரத்தில், பாரத் பெட்ரோலியத்தின் லாபம் 22.5 சதவீதம் குறைந்து ரூ.4,993 கோடியாகவும், இந்துஸ்தான் பெட்ரோலியத்தின் லாபம் 9 சதவீதம் சரிந்து ரூ.3,483 கோடியாகவும் உள்ளது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரித்ததும், கையிருப்பு எண்ணெய் மூலம் கிடைத்த ஆதாயமும் லாப உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகும்.


இருப்பினும், எரிபொருள் விற்பனை இழப்பு மற்றும் மானியத் தொகை நிலுவையால் இந்நிறுவனங்களுக்கு செப்டம்பர் இறுதியில் ரூ.67,900 கோடி அளவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பயோடீசல் வாங்க டெண்டர்

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 கோடி லிட்டர் பயோடீசல் வாங்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ளன. லிட்டருக்கு அடிப்படை விலை ரூ.88-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 2026 முதல் ஜனவரி 2027 வரையிலான தேவைக்காக இந்தக் கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது. நாடு முழுவதும் 85 இடங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகளை நவம்பர் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பயோடீசல் கொள்முதல் செய்யப்படும்.

 இதன் அடிப்படை மதிப்பு ரூ.1,320 கோடியாகும். கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதும், உள்நாட்டு புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டை அதிகரிப்பதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களாகும்.

முந்தைய செய்தி
ஐபிஓ பங்கு வெளியீட்டுக்கு தயாராகும் எஸ்இசிஎல்
அடுத்த செய்தி
டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தும் 45.6% குடும்பத்தினர்: SBI study

தொடர்புடைய செய்திகள்