Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஐபிஓ பங்கு வெளியீட்டுக்கு தயாராகும் எஸ்இசிஎல்

ஐபிஓ பங்கு வெளியீட்டுக்கு தயாராகும் எஸ்இசிஎல்

எஸ்இசிஎல் ஆரம்பப் பொதுப் பங்குகளை (ஐபிஓ) வெளியிடுவதற்கான வரைவு ஆவணங்களை ‘செபி’யிடம் தாக்கல் செய்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

கோல் இந்தியாவின் துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எஸ்இசிஎல்) ஆரம்பப் பொதுப் பங்குகளை (ஐபிஓ) வெளியிடுவதற்கான வரைவு ஆவணங்களை ‘செபி’யிடம் தாக்கல் செய்துள்ளது.

இந்தப் பங்கு வெளியீடானது முழுமையாக விற்பனைக்கான சலுகை முறையில் அமையவுள்ளது. இதில் கோல் இந்தியா நிறுவனம் தனது வசமுள்ள 66.81 கோடி பங்குகளை விற்க உள்ளதால், இதன் மூலம் திரட்டப்படும் முழு தொகையும் கோல் இந்தியாவுக்கே செல்லும். புதிய பங்குகள் எதுவும் இதில் வெளியிடப்படவில்லை.


சத்தீஸ்கரின் பிலாஸ்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், 2025-26-ம் நிதியாண்டில் 17.62 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்து, நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 16.94 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.

 இதன் மூலம் நாட்டின் 2-வது பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமாக இது திகழ்கிறது. மேலும், கடந்த செப்டம்பருடன் முடிந்த அரையாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் இரட்டிப்பாகி ரூ.2,174.3 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
தீபாவளி ஆஃபர்: தமிழகம் வழியாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு
அடுத்த செய்தி
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,106 கோடி நிகர லாபம்

தொடர்புடைய செய்திகள்