Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நவம்பர் 4-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: நாளை எப்படி?

நவம்பர் 4-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: நாளை எப்படி?

நவ. 3-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாளை (அக். 30) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் (சனிக்கிழமை) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், ஏனைய பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நவ.1-ம் தேதி வடக்கு கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவ.2ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ. 3-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நவ.4-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிஎஃப்ஓவாக அக்சித் சவுத்ரி நியமனம்
அடுத்த செய்தி
பங்குதாரர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி வழங்கும் தென்கொரிய நிறுவனம்

தொடர்புடைய செய்திகள்