Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மு.க.அழகிரி மகள் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மு.க.அழகிரி மகள் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கயல்விழி தரப்பில் தனது மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

வங்கி மேலாளரை அறைந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகரியின் மகள் கயல்விழி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை அடையார் எஸ்.பி.ஐ. வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்ததாக மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அழகிரி மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கயல்விழி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கயல்விழி தரப்பில் தனது மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, வழக்கின் இறுதி அறிக்கையை நான்கு வாரங்களில் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சாஸ்திரி நகர் காவல் நிலையத்தினருக்கு உத்தவிட்டார்.
முந்தைய செய்தி
Indian households shift spending to non-food Items, services: Report
அடுத்த செய்தி
ஆட்டம்பெர்க், ரத்னதீப் உள்ளிட்ட 4 நிறுவனங்களின் ஐபிஓவுக்கு செபி ஒப்புதல்

தொடர்புடைய செய்திகள்