Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ராணிப்பேட்டையில் ரூ.40 கோடி கல்விக்கடன் இலக்கு

ராணிப்பேட்டையில் ரூ.40 கோடி கல்விக்கடன் இலக்கு

மாணவர்கள் பி. எம். வித்யாலட்சுமி இணையதளம் வாயிலாக கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் அன்னை மீரா தொழில்நுட்பவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்வி கடன் முகாம் நடத்தினர். இதில் 50 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனுதவி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

நடப்பாண்டில் தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,223.48 கோடி கல்வி கடனை வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி நடப்பாண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 1,500 மாணவர்களுக்கு ரூ.40 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பி. எம். வித்யாலட்சுமி இணையதளம் வாயிலாக கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ரூ.7.5 லட்சம் வரை கல்வி கடன் பெறுவதற்கு பிணையம் தேவையில்லை. படிப்பை முடித்த பிறகு கல்விக் கடனை 15 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் என்றார்.

முந்தைய செய்தி
வேதாந்தா இரும்பு, எஃகு நிறுவனத்தின் இழப்பு ரூ.311 கோடியாக குறைவு
அடுத்த செய்தி
தீபாவளி முதலீட்டுக்கு 9 பங்குகள்

தொடர்புடைய செய்திகள்