Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

போட்டி தேர்வுகளில் இளைஞர்களுக்கு உதவும் நூலகங்கள்

போட்டி தேர்வுகளில் இளைஞர்களுக்கு உதவும் நூலகங்கள்

கிராமப்புற மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் கிடைக்க 32 மாவட்ட மைய நூலகங்கள், 241 முழுநேர கிளை நூலகங்கள், 320 கிளை நூலகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

அரசு போட்டித் தேர்வுக்களுக்கான புத்தகங்கள், இணைய வசதிகள், நாளிதழ்கள் உள்ளிட்ட வசதிகள் நூலங்களில் கிடைப்பதால், இளைஞர்கள் அங்கு அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் பொது நூலக இயக்கத்தின் கீழ் 4,661 நூலகங்கள் இயங்குகின்றன. இதில் 32 மாவட்ட மைய நூலகங்கள், 314 முழுநேர கிளை நூலகங்கள், 1,612 கிளை நூலகங்கள், 1,915 கிராம நூலகங்கள் உள்ளன. போட்டித்தேர்வுக்கு தயாராகும் கிராமப்புற மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் கிடைக்க 32 மாவட்ட மைய நூலகங்கள், 241 முழுநேர கிளை நூலகங்கள், 320 கிளை நூலகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிதியுதவியாக ரூ.2 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இதில் போட்டித் தேர்வுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில், புத்தங்கள், பருவ இதழ்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. போட்டித்தேர்வு பிரிவில் பருவ இதழ்களைத் தேர்வு செய்ய குறைந்தபட்சம் 4 வாசகர்களின் பரிந்துரை பெறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில், போட்டித்தேர்வுக்கென தனிப்பிரிவு செயல்படுகிறது. 2022-23-ல் இந்த நூலகத்தை பயன்படுத்திய 27 பேர் டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு சென்றுள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மாணவர் நவநீத் கூறுகையில், “அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தினசரி 5 முதல் 6 மணி நேரம் வரை படிக்கிறேன். வீட்டில் படிப்பதை விட நூலகத்தில் படிக்கும்போது அமைதியான சூழல் கிடைக்கிறது. தொடர்ந்து படிக்க இது என்னை ஊக்கப்படுத்துகிறது. என்னிடம் இருக்கும் புத்தகங்களுடன், நூலகத்தில் கிடைக்கும் புத்தகங்களையும் பயன்படுத்தி வருகிறேன். கடந்த 6 மாதங்களுக்கு மேல் ‘செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்’ தேர்வுக்கு தயாராகி வருகிறேன். என் கனவை எட்டடுவதற்கு நூலகம் முக்கிய பங்காற்றுகிறது" என்றார்.

மாணவி பூஜா கூறுகையில், “அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 7 மாதமாக போட்டித்தேர்வுக்காக படித்து வருகிறேன். தற்போது ஆர்ஆர்பி ரேடியோகிராபர் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். நூலகத்தைப் பயன்படுத்துவதால், மாதாந்திர படிப்பு செலவும் குறைந்துள்ளது. கோச்சிங் சென்டருக்குச் செல்லாமல், நூலகத்திலேயே படித்து வருகிறேன். இங்கு இணைய வசதி, சார்ஜிங் வசதி, நாளிதழ்கள், போட்டித்தேர்வு புத்தகங்கள் என தேவையான பல வசதிகள் உள்ளன” என்றார். தற்போது நூலகங்கள் தேவையான கல்வி வளங்கள், இணைய வசதி என போட்டித்தேர்வுக்குத் தயாராகும் இடமாக உள்ளன.

முந்தைய செய்தி
நவம்பர் 1 முதல் மியூச்சுவல் ஃபண்டுகளில் ‘டைரக்ட் பிளான்’ இயல்புநிலைத் தேர்வு: செபி அறிவிப்பு!
அடுத்த செய்தி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிஎஃப்ஓவாக அக்சித் சவுத்ரி நியமனம்

தொடர்புடைய செய்திகள்