Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆட்டோ கட்டண உயர்வு - CM விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் சங்கத்தினர்

ஆட்டோ கட்டண உயர்வு - CM விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் சங்கத்தினர்

13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்ட முதல்வர் விஜய்க்கு நன்றி.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பின், ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் கடைசியாக கடந்த 2013 ஆகஸ்டில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது, குறைந்தபட்சம் ரூ.25ஆகவும், கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.12 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, முதல் 1.8 கி.மீ.க்கு குறைந்தபட்சமாக ரூ.50, கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.25 கட்டணமாகவும், மலைப்பகுதியில் முதல் 1.8 கி.மீ தூரத்துக்கு குறைந்தபட்சம் ரூ.60, கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.30 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, வழக்கமான கட்டணத்தைவிட, 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். காத்திருப்புக் கட்டணமாக நிமிடத்திற்கு 1 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் வரவேற்பு

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சிஐடியு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம், உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம், இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில்,

மினிமம் 1.5 கி.மீட்டருக்கு ரூ.60, அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.30 கட்டணமாக அறிவிக்க அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். இருந்த போதிலும், 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்ட முதல்வர் விஜய்க்கு நன்றி. 

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடக்கூடிய சென்னையில் ஆட்டோ மீட்டர்களை பழுது பார்க்கும் மெக்கானிக்குள் 40 பேர் மட்டுமே உள்ளனர். எனவே ஆட்டோக்களில் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கு கால அவகாசம் தேவைப்படும். ஓலா, ஊபர் போன்ற செயலிகளுக்கு மாற்றாக, தமிழக அரசே செயலியை உடனடியாக தொடங்கி செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
Hackers target US election watchdog's filing system
அடுத்த செய்தி
இஸ்ரேல் தூதரக காவலரை தாக்கிய இளைஞர் சுட்டுக்கொ*

தொடர்புடைய செய்திகள்