Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு முகவர்கள் வரவேற்பு

ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு முகவர்கள் வரவேற்பு

63 வகையான பால் சார்ந்த பொருட்களின் விற்பனை விலை உயர்வை சங்கம் வரவேற்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வுக்கு முகவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், கமிஷன் தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் நெய், வெண்ணெய், பனீர் உள்ளிட்ட 63 வகையான பால் சார்ந்த பொருட்களின் விற்பனை விலை உயர்வை சங்கம் வரவேற்கிறது. 


முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, விவசாயிகளுக்கான விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியதோடு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ 6. ஆக உயர்த்தியதையும் பாராட்டுகிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தற்போதைய விலை உயர்வு அவசியமாகிறது.
ஆனால், கடந்த 2021-2026 திமுக ஆட்சியில் கொள்முதல் விலையை உயர்த்தாமல் விற்பனை விலையை மட்டும் பலமுறை கடுமையாக உயர்த்தப்பட்டது. 

அதேநேரம், ஆண்டின் 365 நாட்களும் மழையோ, வெயிலோ பாராமல் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி பால் விநியோகம் செய்யும் முகவர்களின் வாழ்வாதாரத்தை ஆவின் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. 

இது கண்டனத்திற்குரியது. இதையடுத்து, விவசாயிகளின் நலனைக் காக்கும் ஆவின் நிர்வாகம், தற்போதைய விற்பனை விலை உயர்வுக்கு ஏற்றவாறு பால் முகவர்களுக்கான லாபத் தொகையையும் உடனடியாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
APSEZ Q2 consolidated revenue up 24% to Rs 11,340 crore
அடுத்த செய்தி
அன்பில் மகேஷை 5 நாள்கள் காவலில் எடுக்க மனு

தொடர்புடைய செய்திகள்