Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அன்பில் மகேஷை 5 நாள்கள் காவலில் எடுக்க மனு

அன்பில் மகேஷை 5 நாள்கள் காவலில் எடுக்க மனு

அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை 5 நாள்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில், அப்போதைய பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 இந்நிலையில், ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், அவரை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். 

அந்த மனுவில், தலைமறைவாக உள்ள முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார் உடனான தொடர்புகள், யார் யாரிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது, வேறு யார் இதில் இடைதரகர்களாக செயல்பட்டுள்ளனர், பணப் பரிமாற்றங்கள் குறித்து அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், அவரை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு முகவர்கள் வரவேற்பு
அடுத்த செய்தி
Phishing, social engineering campaigns may rise this festive season

தொடர்புடைய செய்திகள்