Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திருச்சியிலிருந்து மலேசியா, சிங்கப்பூருக்கு கூடுதல் விமான சேவை

திருச்சியிலிருந்து மலேசியா, சிங்கப்பூருக்கு கூடுதல் விமான சேவை

டிசம்பர் 1-ம் தேதி முதல் திருச்சி – கோலாலம்பூர் வழித்தடத்தில் தினசரி இரண்டு விமானங்களை இயக்க ஏர் ஏசியா திட்டமிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பண்டிகையையொட்டி, திருச்சியிலிருந்து மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு கூடுதல் விமான சேவைகளை ஏர் ஏசியா மற்றும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால், பண்டிகைக் காலத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பயணிகளுக்கு கூடுதல் விமான வசதி கிடைக்கும்.


திருச்சி – கோலாலம்பூர் இடையே ஏர் ஏசியா நிறுவனம் தற்போது தினசரி ஒரு விமானத்தை இயக்கி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 6 முதல் 12-ம் தேதி வரை கூடுதலாக ஒரு தினசரி சிறப்பு விமானத்தை இயக்க உள்ளது.

மேலும், டிசம்பர் 1-ம் தேதி முதல் திருச்சி – கோலாலம்பூர் வழித்தடத்தில் தினசரி இரண்டு விமானங்களை இயக்க ஏர் ஏசியா திட்டமிட்டுள்ளது. இதனால், மலேசியாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு கூடுதல் பயண வாய்ப்பு கிடைக்கும்.

இதேபோல், சிங்கப்பூரைச் சேர்ந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம், நவம்பர் 15-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும் ஒரே நாளில் மூன்று விமான சேவைகளை இயக்குகிறது. தீபாவளியையொட்டி, நவம்பர் 3 மற்றும் 15 ஆகிய தேதிகளிலும் சிறப்பு விமான சேவைகளை இயக்குகிறது.

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்தக் கூடுதல் விமான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முந்தைய செய்தி
சென்னையில் ஓவியக் கண்காட்சி தொடக்கம்: அக்.30-ம் தேதிவரை டைம்!
அடுத்த செய்தி
Trump claims France is 'burning down' over immigration policies

தொடர்புடைய செய்திகள்