Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்னையில் ஓவியக் கண்காட்சி தொடக்கம்: அக்.30-ம் தேதிவரை டைம்!

சென்னையில் ஓவியக் கண்காட்சி தொடக்கம்: அக்.30-ம் தேதிவரை டைம்!

வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை கலை ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் பார்வையிடலாம்.

பகிரவும் WhatsApp Facebook

திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணியின் 50 ஆண்டுக்கும் மேலான கலைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக 'தோட்டா தரணி – ஒரு பார்வை: 1969–இன்று வரை' என்ற ஓவிய கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.


சென்னை லலித் கலா அகாடமியில் ஆர்ட்வேர்ல்ட் - சரளாஸ் ஆர்ட் இன்டர்நேஷனல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியின், தொடக்க விழாவில் தி கேசிபி நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநரான கவிதா தத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில், டாக்டர். அஷ்ரப் எஸ்.பகத் எழுதிய தோட்டா தரணி குறித்த சிறப்புப் புத்தகமும் வெளியிடப்பட்டது.
தோட்டா தரணி இந்திய சினிமாவில் ஒரு கலை இயக்குநராக பரவலாக அறியப்பட்டாலும், இயற்கை, கட்டிடக்கலை, இந்திய மரபுகள், புராணங்கள், இசை மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய தோட்டா தரணியின் தேடல்களைப் பிரதிபலிக்கும் 280-க்கும் மேற்பட்ட படைப்புகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை கலை ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் பார்வையிடலாம்.
முந்தைய செய்தி
50 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்களுக்கு ஆபத்து!
அடுத்த செய்தி
திருச்சியிலிருந்து மலேசியா, சிங்கப்பூருக்கு கூடுதல் விமான சேவை

தொடர்புடைய செய்திகள்