Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

புழல் சிறையில் அன்பில் மகேஷ் - ஜாமீன் கோரி மனு

புழல் சிறையில் அன்பில் மகேஷ் - ஜாமீன் கோரி மனு

அன்பில் மகேஷை நவம்பர் 6ஆம் தேதி வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பகிரவும் WhatsApp Facebook

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த வழக்கில், திமுகவை சேர்ந்த முன்னாள் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சிகாலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ. கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். பிறகு அவரை கைது செய்தனர்.

சென்னை காவல் ஆணையரகத்தில், 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்கு பிறகு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நீதிபதி எல்எஸ்., சத்தியமூர்த்தி முன்பாக திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, அன்பில் மகேஷை நவம்பர் 6ஆம் தேதி வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவருக்கு முதல் வகுப்பு மற்றும் உடலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய உணவு வழங்க வழங்கவும் புழல் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து, ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
முந்தைய செய்தி
தீபாவளி முதலீட்டுக்கு 9 பங்குகள்
அடுத்த செய்தி
டெட் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்

தொடர்புடைய செய்திகள்