Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டெட் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்

டெட் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்

இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை நவம்பர் 19-ம் வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 20 முதல் 22-ம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான இரண்டாவது சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டெட்) இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடக்கிறது.


அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணியாற்றும், இதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தகுதியான ஆசிரியர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2025 செப்டம்பர் 1-ம் தேதியன்றோ அதற்கு முன்பாகவோ பணியில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் இணையான பணிநிலைகளில் உள்ள தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை நவம்பர் 19-ம் வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 20 முதல் 22-ம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு தொடர்பான தகுதிகள், கட்டணம் மற்றும் பிற நிபந்தனைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சிறப்பு டெட் தேர்வில் 2,20,464 ஆசிரியர்கள் பங்கேற்ற நிலையில், 1,08,781 பேர் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், தேர்ச்சி பெறாத தகுதியான ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக இந்தத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி
புழல் சிறையில் அன்பில் மகேஷ் - ஜாமீன் கோரி மனு
அடுத்த செய்தி
காட்டிக்கொடுத்த ட்ரோன்: சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளில் 13 பேர் கைது

தொடர்புடைய செய்திகள்