Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆரோக்கியமற்ற உணவு - ரத்தக் கொழுப்பு அதிகரிக்கும் அபாயம்

ஆரோக்கியமற்ற  உணவு - ரத்தக் கொழுப்பு அதிகரிக்கும் அபாயம்

அதிக மரபணு அபாயம் கொண்டவர்களிடம் ரத்த சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சில மரபணுக்களால் ஏற்படும் அதிக ரத்தக் கொழுப்புச் சத்து அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று சென்னை மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை, டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மருத்துவ மையம் மற்றும் இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


அக்டோபர் 14-ம் தேதி வெளியான பிளாஸ் ஒன் (PLOS ONE) ஆய்விதழில் சென்னையைச் சேர்ந்த 25 முதல் 80 வயதுக்குட்பட்ட 1,020 பேரின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இவர்களில் 452 பேர் ஆண்கள்; 568 பேர் பெண்கள். ஆய்வில், மரபணு ரீதியாக அதிக அபாயம் கொண்டவர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டபோது, அவர்களிடம் மொத்த ரத்தக் கொழுப்புச் சத்தும், கெட்ட கொழுப்புச் சத்து (எல்.டி.எல்.) அளவும் அதிகமாக இருந்தன. 


 அதேசமயம், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கொண்டவர்களிடம் மரபணு அபாயத்தின் அடிப்படையிலான இந்த வேறுபாடு குறிப்பிடத்தக்க அளவில் காணப்படவில்லை. மேலும், அதிக மரபணு அபாயம் கொண்டவர்களிடம் ரத்த சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் வி. மோகன் கூறுகையில், மரபணு அபாயம் இருந்தாலும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் முக்கியமானது என்றார்.

இந்தியாவில் நீரிழிவு மற்றும் இதய நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், உணவின் தரத்தை மேம்படுத்துவது அவசியம் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மரபணு அபாயத்தை நேரடியாகக் குறைக்கிறது என்பதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.



முந்தைய செய்தி
NMDC scouts for mining assets across four continents
அடுத்த செய்தி
தாமரையுடன் கூடிய விளக்கு பரிசு: தனுஷ் அரசியல் பேசாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

தொடர்புடைய செய்திகள்