Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவால்தான் இந்த தவெக ஆட்சி - மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவால்தான் இந்த தவெக ஆட்சி - மு.க.ஸ்டாலின்

விஜய் பிரச்சாரம் செய்த இடங்களில் தவெக தோல்வி அடைந்தது. திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவால்தான் இந்த ஆட்சி நடக்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

”தவெக ஆட்சியில் முதலீடுகள் ஆந்திராவிற்கு மடைமாற்றம் செய்யப்படுகின்றன. இது மக்கள் ஆட்சி அல்ல; மர்மமான ஆட்சி” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் நாங்கள் தவெகவை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. கொள்கை எதிரியோடு மோதிய நாங்கள், கோமாளிக் கூட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். அதனால் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.


 தேர்தலில் தவெக அலை வீசவில்லை. விஜய் பிரச்சாரம் செய்த இடங்களில் தவெக தோல்வி அடைந்தது. திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவால்தான் இந்த ஆட்சி நடக்கிறது. ஆதரவு கொடுத்த கட்சிகளை நம்பாமல், அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் வேலையில் தவெக ஈடுபட்டுள்ளது. தவெக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, விலைவாசி உயர்வு என மக்கள் துயரத்தில் உள்ளனர்.

 தவெக தூய சக்தி அல்ல; துயர சக்தி. பொதுவாக, இடைத்தேர்தல் பிரச்சாரங்களுக்கு முதல்வர் பதவியில் இருப்பவர்கள் வர மாட்டார்கள். ஆனால், தனது ஆட்சி மீது நம்பிக்கையில்லாததால், முதல்வர் தொகுதி முழுவதும் சுற்றி வந்து ஷோ காட்டுகிறார். தமிழகத்தில் கார்ப்பரேட் மாபியா ஆட்சி நடக்கிறது. எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

முந்தைய செய்தி
சினிமா வசனம் பேசும் முதல்வர் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
அடுத்த செய்தி
பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - இதுதான் காரணம்

தொடர்புடைய செய்திகள்