Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - இதுதான் காரணம்

பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - இதுதான் காரணம்

நயாரா எனர்ஜி நிறுவனம் தனது எரிபொருள் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மும்பை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதையடுத்து, நயாரா எனர்ஜி நிறுவனம் தனது எரிபொருள் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.


இந்தியாவின் முன்னணி தனியார் எரிபொருள் விநியோக நிறுவனமான நயாரா எனர்ஜி, நாடு முழுவதும் உள்ள தனது பங்குகளின் மூலம் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3-ம் உயர்த்தப்பட்டுள்ளது.


இந்த புதிய விலை உயர்வு நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினங்கள் அதிகரித்துள்ளதே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. 

நாடு முழுவதும் 7,000-க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, தனியார் பங்குகளை நம்பியிருக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

முந்தைய செய்தி
திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவால்தான் இந்த தவெக ஆட்சி - மு.க.ஸ்டாலின்
அடுத்த செய்தி
வலுக்கட்டாயமாக வெளியேற்றம் - டேங்கர் லாரிகள் திடீர் வேலைநிறுத்தம்

தொடர்புடைய செய்திகள்